ஒவ்வாமை போக்க அற்புத நிவாரணி

ஒவ்வாமைக்கு அற்புத நிவாரணி மிளகு. 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. எனவேதான் விஷக்கடிக்கு மிளகு மந்திரித்துக் கொடுப்பது என்ற வழக்கம் ஏற்பட்டது.

 மிளகை அரைத்துச் சூடு செய்து பற்றுப் போடத் தலைவி - மூட்டு வலி நீங்கும். மிளகையும் ஜீனியையும் கருக்கிக் கஷாயம் வைத்து சாப்பிட உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் நீங்கும்.

மிளகை ஊசியில் கோர்த்து விளக்கில் காட்டி அந்தப் புகையை மூக்கில் இழுக்க மண்டையில் நீர்க்கட்டு (சைனஸ்) நீங்கும். மிளகைப் பசும்பால் விட்டு அரைத்து சூடு செய்து தலையில் தேய்த்து தலைமுழுகி வர தூக்கமின்மை, மனஅழுத்தம், தலைபாரம், உற்சாகமின்மை அகலும்.

எனவேதான் துக்க வீட்டில் மூன்றாம் நாள் அன்று ரத்த சம்மந்தம் உடைய நெருங்கிய உறவுகள் மிளகுப்பால் தேய்த்துத் தலை முழுக வேண்டும் என்று சம்பிரதாயம் ஏற்படுத்தினர் நம் முன்னோர். அத்துடன் மிளகுப் பொடி - மிளகு ரசம், மிளகுக் குழம்பு செய்து சாப்பிட உடல்நலம் சிறக்கும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

குழந்தை பால் குடித்ததும் கக்கிவிடுகிறார்களே என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது!

'மூலிகைவளம்' இலவச ஈ புத்தகமாக