ஆறாத வயிற்றுப் புண் குணமடைய இயற்கை வைத்தியம்

அறு சுவையும் சமச்சீர் அளவில் அமைந்தால் தான் நல்ல ஆரோக்கியம் கிட்டும். அதை நாம் தற்போது மறந்து விட்டோம். முக்கியமாக துவர்ப்பு உணவை தவிர்த்து விட்டோம்.

அதன் காரணமாக அனைவரும் குடற்புண், இரைப்பைப் புண் என்று மருத்துவரிடம் ஓடும் நிலை. இது குழந்தைகள் - பெரியோர் -முதியோர் என எல்லாத் தரப்பினரையும் ஆட்டும்விக்கும் நோய். இதற்கு அற்புத நிவாரணி வாழைப்பூ.

         இதைப் பருப்புடன் சேர்த்துப் பொரியல், கூட்டு அல்லது துவையல் என அடிக்கடி சாப்பிட்டு வர வயிற்றுப் புண்ணைத் தவிர்க்கலாம். வாழைப்பூவின் உள் மொட்டைக் குழந்தைகளுக்கு பாட்டிகள் பச்சையாக உண்ணக் கொடுப்பது வழக்கம். குழந்தைகளும் அதனை விரும்பிச் சாப்பிடுவர். தற்போது இந்தப் பழக்கங்களைக் கைவிட்டதால வந்த விளைவே மேற்படி நோய்கள்.

        இதை இடித்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நோய்கள் மட்டுப்படும். வாழையின் மருத்துவக் குணத்தை நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள் நீத்தார் நினைவுச் சடங்குகளின் போது வாழையிலை, காய்,பூ,கனி, தண்டு அனைத்தையும் பயன்படுத்தி வந்தார்கள்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

குழந்தை பால் குடித்ததும் கக்கிவிடுகிறார்களே என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது!

'மூலிகைவளம்' இலவச ஈ புத்தகமாக