சூடு தணிக்க இயற்கை வைத்தியம்

உடலில் சூடு தணிக்க இயற்கை வைத்தியம். உடம்பில் சூடு அதிகம் ஏற்பட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் வேக்காளம் என அடுக்கடுக்கான பிரச்சனைகள் குறிப்பாக மூளையை அதிகம் பயன்படுத்தும் அலுவல் இருப்பவர்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் இதற்கு அற்புத நிவாரணி மணத்தக்காளி.
 
      இந்தக் கீரையை வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கழுநீரில் பானம் செய்து சாப்பிட விரைவில் நிவாரணம் கிட்டும். கீரையை வெற்றிலைப் பாக்குபோல் வெறும் வாயில் குதப்ப வாய்ப்புண் தீரும். கூட்டு செய்யலாம், இதன் காயை வற்றல் செய்து சாப்பிட இதய வலி குறையும்,

இந்த வற்றல் மிளகாய் இரண்டையும் வறுத்து உப்பு சேர்த்துப் பொடித்து பாட்டிலில் வைத்துக்கொண்டு சாதத்தில் எண்ணை விட்டுக் கலந்து சாப்பிட வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலி குறையும்.

இதைப் பூண்டு சேர்த்துக் குழம்பு செய்து சாப்பிட நல்ல செரிமாணம் ஏற்படும். பசியைத் தூண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை இந்தக் கீரையை சாப்பிடக் கொடுத்தால் மூளைச் சூடு குறைந்து படிப்பில் நல்ல தெளிவு ஏற்படும்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

குழந்தை பால் குடித்ததும் கக்கிவிடுகிறார்களே என்ன காரணம்? எப்படி தவிர்ப்பது!

'மூலிகைவளம்' இலவச ஈ புத்தகமாக