உங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டியதை நிறுத்திவிட்டு தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள்.. அவ்வாறு நீங்கள் அவர்களை பழக்கப்படுத்தும் போது உணவு தயாரிக்க பயன்படுத்தும் ஃபுட் புராசசர், கஞ்சி வகைகள் மற்றும் பாட்டிலில் அடைத்து வைத்த உணவுப் பொருட்களுக்கு இனி குட்பை சொல்லிவிடலாம். உங்கள் குழந்தை தானாக உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள். அதன்பிறகு அவர்களாகவே உணவை ரசித்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளை பொறுத்தவரை விளையாட்டு என்பது ஒரு கற்றல் போல தான். எனவே குழந்தைகள் தானாக சாப்பிட ஆரம்பிக்கும் நேரத்தில் அவர்கள் அதையும் ஒரு விளையாட்டை போல கையாளுவார்கள். இதன் மூலம் உணவுப் பொருளின் அளவு, வண்ணம், வடிவம், எடை போன்ற விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்வார்கள். குழந்தையை தானாக சாப்பிட வைப்பது என்றால் என்ன? பொதுவாக குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து நாம் திட உணவை கொடுக்க ஆரம்பித்து இருப்போம். ஆனால் அந்த உணவு வகைகள் எல்லாமே மசித்த பழங்கள், மசித்த காய்கறிகள், கஞ்சி வகைகள், கூழ் வகைகள் என்ற வடிவில் தான் இருக்கும். திட உணவை கொடுத்தல் -(BLW-Baby L...
Comments
Post a Comment