கொரோனாவுக்கு தடுப்பூசி.. முழுவீச்சாக ஈடுபட்டுள்ள தமிழர்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸூக்கு தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் ராஜ் என்ற ஆராய்ச்சியாளர் புதிய தடுப்பூசியை கண்டறிந்து வருகிறார்.


வைரஸ் தொடர்பாக கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் இவர், திருவனந்தபுரத்தில் மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஸ்டாலின் ராஜ் கொரோனோ அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும் என்ற சபதத்தோடு ஆராய்ச்சியில் முழுவீச்சாக ஈடுபட்டுள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவருடன் 5-க்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.


ஸ்பைக் என்ற புரோட்டினை குளோன் செய்து வைரஸிற்கான ஆண்டிபாடிகள் கண்டறியும் சோதனைகள்



மேற்கொள்ளப்படுகின்றன. Biological Safety Levels (BSL) 3 (உயிரியல் பாதுகாப்பு நிலைகள் 3) என்ற ஆய்வகங்கள் இங்கு இல்லாதது தடுப்பூசி கண்டறியும் பணிகளில் கால தாமதம் ஏற்படச் செய்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.

Comments